சாத்தான்குளம் அருகே கோயிலில் புகுந்து பூஜை பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள நகனை கிராமத்தில் மாசானமுத்துசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரியான பால், சிறப்பு பூஜைக்காக வெள்ளிக்கிழமை கோயிலை திறக்க சென்றாராம். அப்போது கோயில் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த குத்துவிளக்கு, சரவிளக்கு, பித்தளை கொப்பரை, அம்மனின் வெள்ளி காது அணிகலன்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.