தூத்துக்குடி

கோவில்பட்டி பள்ளியில் ஆடை அலங்காரப் போட்டி

22nd Sep 2019 12:18 AM

ADVERTISEMENT


கோவில்பட்டி கிராண்ட் கிட்ஸ் ப்ளே பள்ளியில் ஆடை அலங்காரப் போட்டி  சனிக்கிழமை நடைபெற்றது. 
பள்ளித் தாளாளர் அமுதவள்ளி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் வெங்கடேஸ்வரன், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை மஞ்சுளாதேவி வாழ்த்திப் பேசினார்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் துரை பத்மநாபன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டியை தொடங்கிவைத்தார்.
போட்டியில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகள் மாம்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பல்வேறு பழங்களின் தோற்றத்தில் ஆடைகள் அணிந்திருந்தனர்.
நிகழ்ச்சியில், வழக்குரைஞர் கருப்பசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
ஆசிரியை சங்கீதா வரவேற்றார். அஜிதா நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT