தூத்துக்குடி

முத்துமாலைவிளை கோயில் கொடை விழா

13th Sep 2019 06:39 AM

ADVERTISEMENT

குரும்பூர் அருகே உள்ள முத்துமாலைவிளை அருள்மிகு  சந்தனமாரியம்மன் கோயிலில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது.  
 முதல் நாள்  மஹா கணபதி ஹோமம்,  நவக்கிரஹ பூஜை, கோ பூஜை,  வருஷாபிஷேகமும்,  சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன. இரண்டாம் நாள் காலை 9 மணிக்கு அம்மன்புரம் விநாயகர்  கோயிலிலிலிலிருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகமும்,  மதியக் கொடையும் நடைபெற்றது. மாலையில்  அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலிலிலிலிருந்து பூரண கும்பம் எடுத்து வரப்பட்டது. 
இரவு  முளைப்பாரி ஊர்வலமும்,  நள்ளிரவு சாமக்கொடையும் நடைபெற்றது. மூன்றாம் நாள்  பகலில்  மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சின்னத்துரை, சிவா, ரத்தினக்குமார், அருண்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT