தூத்துக்குடி

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

13th Sep 2019 06:34 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் நிறுவனம் ஓய்வூதியர்களுக்கு 1.1.2017 முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய உயர்வை 15 சதவீத ஊதிய பலனுடன் வழங்குவதாக ஒத்துக்கொண்டு இதுவரை வழங்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்தும், ஓய்வூதிய பலனை உடனடியாக வழங்க கோரியும், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்துக்கு,  அமைப்பின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அகில இந்திய உதவி தலைவர் மோகன்தாஸ், மாவட்டச் செயலர் ராமர், பொருளாளர் கணேசன் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT