தூத்துக்குடி

சாகுபுரம் கமலாவதி பள்ளி சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வுப் பேரணி

13th Sep 2019 06:36 AM

ADVERTISEMENT

சாகுபுரம் கமலாவதி பள்ளி சார்பில் தூய்மை இந்தியா திட்ட  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
 ஆறுமுகனேரி மெயின் பஜாரில் இருந்து தொடங்கிய இப் பேரணிக்கு பள்ளி முதல்வர் ஆர்.சண்முகானந்தன் தலைமை வகித்தார்.   காவல் ஆய்வாளர் பத்ரகாளி கொடியசைத்து  பேரணியை தொடங்கி வைத்தார். 
 இந்த  பேரணி மூலக்கரை ரோடு, பூவரசூர், காந்திதெரு, காந்தி மைதானம், சோமசுந்தரி அம்மன் கோயில் தெரு  வழியாக வாலவிளை வடக்கு பஜாரில் நிறைவடைந்தது.  இதில் பங்கேற்ற மாணவர், மாணவிகள் நெகிழிப் பெருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,  மழை நீரை சேமிக்க வேண்டும், தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலிலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.  நிகழ்ச்சியில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் வி.மதன்,  காவல்  உதவி  ஆய்வாளர் சரவணன்,  கருணா சங்க ஆசிரியர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.   ஏற்பாடுகளை தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்சாமுவேல் எபநேசர், ஜுடிஸ்பூபாலராயர் ஆகியோர் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT