தூத்துக்குடி

காசநோய் விழிப்புணர்வு தேசிய ஊட்டச்சத்து மாத விழா

13th Sep 2019 06:31 AM

ADVERTISEMENT

மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காசநோய் விழிப்புணர்வு தேசிய ஊட்டச்சத்து மாத விழா மெஞ்ஞானபுரம் ஜான்தாமஸ் கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சு.அனிபிரிமின் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் ஜெசெல்வி,  சமுதாய சுகாதார செவிலியர் லில்லி பாக்கியவதி, சுகாதார ஆய்வாளர் சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண் மருத்துவ உதவியாளர் முருகன் வரவேற்றார். காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பார்த்திபன் நன்றி    கூறினார்.
இதில், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT