தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டத்தில் விழிப்புணர்வுப் பேரணி

7th Sep 2019 07:36 AM

ADVERTISEMENT

வாகன விதிமீறல் அபராத தொகை உயர்வு குறித்த விழிப்புணர்வுப் பேரணி ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.
இப்பேரணிக்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமை வகித்தார். குமரகுருபர ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. பின்னர் , அங்கிருந்த பயணிகளிடமும், பொதுமக்களிடமும் போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை உயர்வு குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை டிஎஸ்பி வழங்கிப் பேசினார். பேரணியில், ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் ஜோசப் ஜட்சன், ஆழ்வார்திருநகரி உதவி ஆய்வாளர் பெருமாள் உள்ளிட்ட காவல்துறையினரும், குமரகுருபரர் பள்ளி மாணவர்- மாணவிகளும் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT