தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 07:41 AM

ADVERTISEMENT

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்து, ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீராமன் தலைமை வைத்தார். வட்டாரத் தலைவர் நல்லக்கண்ணு, ஸ்ரீவைகுண்டம் நகரத் தலைவர் சித்திரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஐஎன்டியூசி தொழிற்சங்க நிர்வாகி சந்திரன், ஆத்தூர் நகரத் தலைவர் பாலசிங்கம், உடன்குடி நகரச் செயலர் ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி தலைவி பஞ்சவர்ணம்,  ஓபிசி பேரவைத் தொகுதித் தலைவர் சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT