தூத்துக்குடி

விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் விளாத்திகுளத்தில் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 07:38 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் விளாத்திகுளத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், விளாத்திகுளத்திலிருந்து முள்ளுர் வழியாக தூத்துக்குடி செல்லும் அரசுப் பேருந்தை தினமும் 3 முறை இயக்குவது,  வீரபாண்டியபுரத்துக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவது, பிள்ளையார்நத்தம் முதல் வள்ளிநாயகிபுரம் வரை உள்ள சாலையை புதுப்பிப்பது, சீரான மின்சாரத்துக்கு கூடுதலாக மின்மாற்றிகள் அமைப்பது, அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டுவது'  என்பன உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பழைய வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய தொழிலாளர் சங்க துணைச் செயலர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். வீரபாண்டியபுரம் கிளை நிர்வாகிகள் செல்வி, ராதா, ராமரத்தினம், கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி அகில இந்திய விவசாய சங்கப் பிரதிநிதிகள் உரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநில இணைச்செயலர் மலைவிளை பாசி, மாவட்டத் தலைவர் கு. ரவீந்திரன், மாவட்டச் செயலர் சண்முகராஜ், வட்டச் செயலர் புவிராஜ், வட்டக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், மலைக்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT