தூத்துக்குடி

ரூ.3,000 ஓய்வூதியத் திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு

7th Sep 2019 07:35 AM

ADVERTISEMENT

உடன்குடி வட்டார விவசாயிகள் ரூ. 3,000 ஓய்வூதியம் பெறும் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என வேளாண் உதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
பிரதமரின் விவசாயிகள் ஒய்வூதியத் திட்டத்தில் உடன்குடி வட்டார சிறு, குறு விவசாயிகள்  இணைந்து பயனடையலாம். 18 முதல் 40 வயது வரை  அந்தந்த வயதுக்கேற்ப பிரீமியத் தொகை மாதம் தோறும் ரூ. 55 முதல் ரூ. 200 வரை செலுத்த வேண்டும்.   மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடத்திற்கு ஒருமுறை என்ற தவணைகளில்  தங்கள் வங்கி கணக்கு மூலம்   பணம் செலுத்தலாம். எதிர்பாராத விதமாக பணம் கட்டியவர் இறந்து விட்டால் அவருடைய வாரிசுதாரருக்கு தொடர்ந்து மாதம் ரூ. 1500 ஓய்வூதியமாக கிடைக்கும். மேலும் 5 ஆண்டுகளுக்கு பிறகு இத்திட்டத்தில் தொடர விருப்பம் இல்லை என்றால் கட்டிய பணத்தை வட்டியுடன் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். சிறு,குறு விவசாயிகள் தங்கள் பெயரில் நிலம் இருந்தாலும், 40 வயதினை கடந்து விட்டால் தனது குடும்பத்தில் உள்ள மனைவி, மகன் அல்லது மகள் பெயரிலும் இணையலாம். இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் தவிர மற்ற அனைத்து விவசாயிகளும் இணைத்து பயன்பெறலாம்.   ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வாரிசுதாரரின் ஆதார் அட்டை   செல்லிடப்பேசி  எண் ஆகிய ஆவணங்களை தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தில் பதிவு செய்து இத்திட்டத்தில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT