தூத்துக்குடி

பரிவல்லிக்கோட்டையில் வேளாண் கண்காட்சி

7th Sep 2019 07:37 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி ஸ்காட் வேளாண் அறிவியல் மையம் மற்றும் வேளாண் துறை சார்பில் நீர் ஆற்றல் மேலாண்மையின் ஒரு பகுதியாக ஓட்டப்பிடாரம் வட்டம் பரிவல்லிக்கோட்டையில் உழவர் விழா மற்றும் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அலுவலர் தனபதி தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் ஆசீர் கனகராஜ், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் அறிவியல் மையத்தின் முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் சீனிவாசன் வரவேற்றார்.
கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியர் செந்தில்குமார், விவசாயத்தில் சிறப்பு நீர்ப் பாசன முறைகள், நீர் உபயோக திறன் அதிகரிப்பு முறைகள் குறித்து பேசினார். வனவியல் துறை உதவி பேராசிரியர் குமார், சமூக காடுகள் மற்றும் வேளாண் காடு வளர்ப்பு பற்றி விளக்கினார். 
வேளாண் அறிவியல் மைய உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநர்  முருகன், வறட்சியை தாங்கும் பயிர் ரகங்கள் மற்றும் நீர் வள பாதுகாப்பில் உள்ள உழவியல் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார். ஓய்வுபெற்ற பூச்சியியல் துறை பேராசிரியர் ராமமூர்த்தி, மக்காசோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து எடுத்துரைத்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT