தூத்துக்குடி

"தொழில்நிறுவனங்கள் தரச்சான்று மானியம் பெற விண்ணப்பிக்கலாம்'

7th Sep 2019 07:44 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் தரச்சான்று மானியம் பெற விண்ணக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் சர்வதேச போட்டித் தன்மையை மேம் படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏதுவாகவும் அந்நிறுவனங்கள் ISO 9000, ISO 14001, ISO 22000, HACCP, GHP, BIS, ZED    உள்ளிட்ட சர்வதேச தரச் சான்றிதழ்கள் பெற செலுத்தும் கட்டணத்தில் ஒவ்வொரு சான்றிதழுக்கும் "Q-Cert''  என்ற புதிய திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்க தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
 அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கூறிய தரச்சான்றிதழ்கள் மற்றும் இந்திய அரசால் அங்கீ கரிக்கப்பட்ட பிற சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெற்ற தேதியில் இருந்து ஒரு ஆண்டுக்குள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.  தொழில் நிறுவனங்களின் ஒவ்வொரு கிளைக்கும் தனித்தனியாக மானியம் பெறலாம்.
 தரச் சான்றிதழ்கள் பெற செலவழித்த கட்டணத் தொகையில் (பயணச் செலவு, தங்குமிடம், உணவு மற்றும் கண்காணிப்புச் செலவு தவிர்த்து) 100 சதவீதம் (அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை)  மானியம் கிடைக்கும்.  இந்த தரச்சான்றிதழ்கள் பெறு வதால்  இம்மாவட்டத்தில்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தரம்  மேம்படும்.   உற்பத்தி திறன் அதிகரிக்கும்.   தொழில் விரிவாக்கம் ஏற்படும்.  வேலை வாய்ப்புகள் பெருகும். 
 எனவே, தமிழக அரசின் "Q-Cert" என்ற புதிய திட்டத்தை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கூடுதல் விவ ரங்களுக்கு தூத்துக்குடி புறவழிச்சாலையில் உள்ள பொது மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. 


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT