தூத்துக்குடி

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் நாளை குரூப்-2 தேர்வுக்கு பயிற்சி தொடக்கம்

7th Sep 2019 07:41 AM

ADVERTISEMENT

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி பயிற்சி மையங்களில் குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 8) தொடங்குகிறது.
 இதுகுறித்து சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியின் நிறுவனர் து. சுகேஷ் சாமுவேல் வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 மற்றும் 2 ஏ பதவிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்வு எழுதுவோருக்கு முன்கூட்டிய பயற்சி அளிக்க சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி முடிவு செய்துள்ளது.
 அதன்படி, தேர்வுக்கு எவ்வாறு தயாராவது? தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.  8) அறிமுகவுரையுடன் வகுப்புகள் தொடங்குகின்றன. இதுதவிர, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் இலவச மாதிரி தேர்வு நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT