தூத்துக்குடி

உடன்குடியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பேரணி

7th Sep 2019 07:39 AM

ADVERTISEMENT

உடன்குடியில், மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, மெஞ்ஞானபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
உடன்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து மாத விழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் நம்பித்துரை தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் குருசாமி வரவேற்றார். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயா துரைப்பாண்டியன், மகளிர் திட்ட சமுதாய அமைப்பாளர் ஜென்சி, பள்ளித் தலைமையாசிரியர் பிரின்ஸ்,  கிராம சுகாதார செவிலியர் மணிமேகலை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில், மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் சு. அனிபிரிமின் திட்ட விளக்கவுரையாற்றி, பேரணியைத் தொடக்கிவைத்தார். முக்கிய வீதிகள் வழியே பேரணி மீண்டும பள்ளியை அடைந்தது. சுகாதார ஆய்வாளர்கள்  சேதுபதி, ஆழ்வார்,  திரளான மாணவர்கள், ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ் நன்றி கூறினார்.


வல்லநாட்டில்...
வல்லநாட்டில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்ட பணியாளர்களிடம்  காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய ஊட்டச்சத்து முகாம் வல்லநாட்டில் நடைபெற்றது.  
முகாமுக்கு  சித்த மருத்துவ அலுவலர் ச.செல்வகுமார்  தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி, சித்த மருத்துவ மருந்தாளுநர்  சி.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் .அ.அப்துல் ரஹீம் ஹீரா  வரவேற்றார்.  காசநோய் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்ட பணித்தளப் பொறுப்பாளர் முருகம்மாள்  நன்றி கூறினார்.  முகாமில் மருத்துவமனைப் பணியாளர் வேம்பன்,  தேசிய ஊரக வேலைஉறுதித் திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT