தூத்துக்குடி

ஆறுமுகனேரி விநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

7th Sep 2019 07:41 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவிலுள்ள அருள்மிகு பாலரத்ன விநாயகர் கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று தினங்கள் நடைபெற்றது. வியாழக்கிழமை காலையில் யாகசாலை பூஜ, நாடி சந்தானம், கடம் புறப்பாடு முதலியன நடைபெற்றன. காலை 9.15மணிக்கு விமான அபிஷேகமும், 9.30மணிக்கு அருள்மிகு பால ரத்ன விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகமும் நடைபெற்றன. காலை 10 மணிக்கு மகா அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும்  நடைபெற்றன. பின்னர் அன்னதானமும், இரவில் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், நகர் நல மன்றத் தலைவர் பி.பூபால்ராஜன், அதிமுக முன்னாள் நகரச் செயலர் இ.அமிர்தராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT