தூத்துக்குடி

"வெளியூரில் வசிக்கும் விவசாயிகள் நிதியுதவி பெற கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளலாம்'

4th Sep 2019 09:44 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் வெளியூரில் வசிக்கும் தகுதியான விவசாயிகள் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:  பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் மூன்று தவணைகளாக வழங்கிட விவசாயிகள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் உதவித் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.
 இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 63ஆயிரத்து 379 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். மேலும், 22ஆயிரத்து 245 தகுதியான விவசாயிகள் வெளியூரில் வசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கிட இயலாத நிலை உள்ளது.   எனவே, வெளியூரில் வசிக்கும் குறிப்பிட்ட விவசாயிகளின் பட்டியல் ‌t‌h‌o‌o‌t‌h‌u‌k‌u‌d‌i.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் வட்டம் மற்றும் கிராம வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது. எனவே, விவசாயிகள் அந்தப் பட்டியலை பார்வையிட்டு மேலும் விவரங்களுக்கு தங்கள் கிராம பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரை அணுக  வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT