தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் மதிமுக ஆலோசனைக் கூட்டம்

4th Sep 2019 09:43 AM

ADVERTISEMENT

விளாத்திகுளத்தில் கிழக்கு ஒன்றிய மதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட இளைஞரணிச் செயலர் விநாயகா ரமேஷ் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியச் செயலர் மணிராஜ், மேற்கு ஒன்றியச் செயலர் குறிஞ்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.எஸ். ரமேஷ்,  மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலர் அழகுசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மதிமுக நிர்வாகிகள் குருசாமி கிருஷ்ணன், கோட்டைச்சாமி, செல்வராஜ், மகாராஜன், ராமசுப்பு, ஏஞ்சலா, கமலாபுரம் மாரிச்சாமி, வெங்கட்ராம், சன்னாசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT