தூத்துக்குடி

விநாயகர் அகவல் ஒப்பித்தல் போட்டி

4th Sep 2019 09:45 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தியையொட்டி உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் அகவல் ஒப்பித்தல் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,  உடன்குடி நகர பாஜக தலைவர் கா.ஜெயக்குமார் தலைமை வகித்தார். இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரபாண்டி, ஒன்றியத் தலைவர் செந்தில்செல்வம், நகரச் செயலர்கள் பட்டுராஜன், சித்திரை பெருமாள், ஒ ன்றிய துணைத்தலைவர் முருகேசபாண்டி, ஒன்றிய பாஜக கலை இலக்கிய அணி செயலர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற உடன்குடி ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் பள்ளி, வட்டன்விளை வி.வி.நினைவு பள்ளி மாணவர், மாணவிகள் 105 பேருக்கு புத்தகப் பைகளை சேவாபாரதி மாவட்டத் தலைவர் கிருஷ்ணமந்திரம், பாஜக வெளிநாடு வாழ் தமிழர் பிரிவு தலைவர் பரமசிவன் ஆகியோர் வழங்கினர். விழாவில் திரளான மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT