தூத்துக்குடி

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் வெளிப்படையானது

4th Sep 2019 10:31 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் வெளிப்படையானது என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் அனைத்துமே வெளிப்படையாக மக்களுக்கு தெரியும் வகையில் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவரை போல மறைமுகமாக பயணம் மேற்கொள்ளவில்லை.எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் கூட வெளிநாட்டுக்கு செல்வதானால் அவருடைய பயணத்தை அரசுக்கு முறையாக தெரிவிக்க வேண்டும்.  ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் அவருடைய வெளிநாட்டுப் பயண விவரங்களை அரசுக்கு தெரிவிக்காமலேயே சென்று வருகிறார் என்றார் அவர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT