தூத்துக்குடி

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்

4th Sep 2019 09:42 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாகவுள்ள மருத்துவர்கள் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும், சி.டி. ஸ்கேன் பிரிவை 24 மணி நேரமும் செயல்பட வழிவகை செய்ய வேண்டும், மருத்துவமனை பணியாளர்கள் பணியிடத்தை நிரப்ப வேண்டும், மருத்துவமனை வளாகத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, நாம் தமிழர் கட்சியின் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி பொருளாளர் தேவராஜ் தலைமை வகித்தார்.  இளைஞர் பாசறை இணைச் செயலர் சந்தோஷ் முன்னிலை வகித்தார். 
கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் மா.மாரியப்பன், வடக்கு மாவட்ட வழக்குரைஞர் பாசறை செயலர் ரவிக்குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், நாம் தமிழர் கட்சியின் நகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT