தூத்துக்குடி

பிள்ளையார்பெரியவன்தட்டு கோயிலில் பால்குட ஊர்வலம்

4th Sep 2019 09:47 AM

ADVERTISEMENT

உடன்குடி பிள்ளையார்பெரியவன்தட்டு அருள்மிகு சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழாவையொட்டி பால்குட ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு குடி அழைப்பை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு உடன்குடி கண்டுகொண்ட விநாயகர் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து  பிள்ளையார்பெரியவன்தட்டு கோயிலை அடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது. புதன்கிழமை காலை மற்றும் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜைகள், மஞ்சள் நீராடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT