தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் சார்பில் 270 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு

4th Sep 2019 09:45 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவன நிதியுதவி மூலம் 270 குடும்பங்கள் மாநகராட்சி குடிநீர் வசதியை பெறுகின்றனர்.
ஸ்டெர்லைட் நிறுவனம், தாமிரசுரபி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வசதி மேற்கொண்டு வருகிறது.  அதன்படி, தூத்துக்குடியைச் சுற்றியுள்ள 20 கிராமங்களுக்கு குடிநீர் வசதியை செய்துதர வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம்.
அதன் அடிப்படையில் 270 குடும்பங்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சியால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 35 லட்சம் நிதியுதவியை வழங்கியது.
இதையடுத்து, பண்டாரம்பட்டி, மடத்தூர், சங்கரப்பேரி மற்றும் சில்வர்புரம்  ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 270 குடும்பங்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெறும் வசதியை பெறுகின்றனர் என ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT