தூத்துக்குடி

தனியார் நிலங்களில் இருந்து சரள் மண் அள்ளுவதை தடுக்கக் கோரி மனு

4th Sep 2019 09:41 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அருகே தனியார் நிலங்களில் இருந்து சரள் மண் அள்ளுவதை தடுக்கக் கோரி செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர். 
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வழக்குரைஞர் அய்யலுசாமி தலைமையில், வட்டாட்சியர் மணிகண்டனிடம் அளித்த மனு:  
தூத்துக்குடி - திருநெல்வேலி - கோவில்பட்டி ஆகிய மார்க்கங்களில் 2ஆவது ரயில்வே இருப்புப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  
இப்பணிக்கு தேவையான சரள் மண் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட ஊருணிகள் மற்றும் தனியார் நிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக கோட்டாட்சியர் மற்றும் அந்தந்த வட்டாட்சியரிடம் பல முறை மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்நிலையில், கோவில்பட்டி வட்டம் இடைசெவல் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் இருந்து சரள் மண் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக அதிக ஆழமாக தோண்டி எடுத்துச் செல்கின்றனர். மேலும்,   அனுமதிச் சீட்டை முறையாக பயன்படுத்தாமல் சரள் மண் கடத்தப்படுகிறது. 
எனவே வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட நிலத்தை  ஆய்வு செய்து விதி மீறல்களை தடுத்து நிறுத்துவதோடு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. 
காங்கிரஸ் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மகேஷ்குமார், மாவட்ட பொதுச் செயலர் முத்து, துணைத் தலைவர் கருப்பசாமி, ஒன்றியத் தலைவர்கள் ரமேஷ்மூர்த்தி(கோவில்பட்டி), செல்லத்துரை(கயத்தாறு), கோவில்பட்டி நகரத் தலைவர் சண்முகராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT