தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் பயிலரங்கம்

4th Sep 2019 09:44 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் "உங்கள் வாழ்வின் உச்சத்தை அடையுங்கள்'  என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கல்லூரி முதல்வர் (பொ) சாந்தி மகேஸ்வரி தலைமை வகித்தார். சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார். விஷன் -20 பிளஸ்  என்ற நிறுவனத்தின் நிறுவனர் தணிகைவேல்பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர், மாணவிகளுக்கு பயிற்சிகள் மற்றும் செயல்விளக்கங்கள் அளித்தார்.  மாணவி கனகலட்சுமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.  மாணவர் மாரிசாமி நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை கல்லூரியின் புள்ளியியல் துறை தலைவர் சாரதாதேவி, மின்னணுவியல் துறை தலைவர் மணிமேகலை ஆகியோர் தலைமையில் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT