தூத்துக்குடி

கோவில்பட்டியில் அனைத்துத் துறை  ஓய்வூதியர் சங்கக் கூட்டம்

4th Sep 2019 09:46 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம்  கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் மகேஷ்வரன், பார்த்தசாரதி, ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வட்டச் செயலர் ராமலிங்கம், பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் முனியாண்டிசாமி, சங்க இணைச் செயலர்கள் அர்ச்சுனன், நம்பிராஜ் ஆகியோர் பேசினர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்;   ஓய்வூதியர்களுக்கான 21 மாதங்கள் ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT