தூத்துக்குடி

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசுவாமி  கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

4th Sep 2019 09:46 AM

ADVERTISEMENT

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இக்கோயிலில் ஆவணித் திருவிழா  திங்கள்கிழமை ( செப். 2) தொடங்கி செப்.12ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது. 
முதல் நாளான  திங்கள்கிழமை  காலை 5 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், யாகபூஜை, 7 மணிக்கு சுவாமி உற்சவ விநாயகர், ஸ்ரீவாலாம்பிகை அம்பாள், சுவாமி ஸ்ரீசந்திரசேகரர் மனோன்மணீயம் அம்பாள் சமேதராக எழுந்தருள கொடியேற்றம் நடைபெற்றது.
இதையடுத்து சுவாமி பிரகார உலா வந்து மணிமண்டபத்தில் உற்சவ மூர்த்தியாக அருள்பாலித்தார். 
பின்னர் நண்பகல் 12 மணிக்கு விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும்,  மூல மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
மாலையில் சாயரட்சை பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.  இரவில் சுவாமி உற்சவ விநாயகர் சப்பரத்திலும்,  ஸ்ரீபாலாதிரிபுரசுந்தரி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.
2ஆம் நாளான  செவ்வாய்க்கிழமை முதல்  விழா நாள்களில் உச்சிக்கால பூஜை, சாயரட்சை, திருவாசகம் முற்றோதுதல், ஸ்ரீவாலைகுருசுவாமி ஸ்ரீசந்திரசேகரர் மனோன்மணீயம் அம்பாள் சமேதரராக ஷேத்ரவலம் வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 
10ஆம் நாளான  செப். 11ஆம்தேதி  காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 6.30 மணிக்கு பக்தர்களால் சுவாமிக்கு புஷ்பாஞ்சலியும் , இரவு 7.30மணிக்கு அலங்கார தீபாராதனையும், 9 மணிக்கு சுவாமி உற்சவ விநாயகர் சப்பரத்திலும்,  ஸ்ரீசந்திரசேகரர் மனோன்மணீயம் அம்பாள் சமேதரராய் ரிஷப வாகனத்திலும் வீதி  உலா வருதலும் நடைபெறுகிறது.
நிறைவு நாளான செப். 12ஆம்தேதி காலை 11 மணிக்கு அன்ன அபிஷேகம்,  மதியம் 1.30மணிக்கு நித்யானந்த  மண்டபத்தில் அன்னதான பூஜை,  அதை தொடர்ந்து மகேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT