தூத்துக்குடி

காயல்பட்டினம் கடற்கரையில் தூய்மைப் பணி

4th Sep 2019 09:46 AM

ADVERTISEMENT

காயல்பட்டினம் நகராட்சியில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.           காயல்பட்டினம் நகராட்சி சுகாதாரத் துறையினருடன் இணைந்து காயல் நண்பர்கள் அறக்கட்டளையினர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 
இதில், நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். காயல் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் நெகிழி விழிப்புணர்வு  துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.  மேலும், கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்களிடம் குப்பைகளை அதற்குரிய இடத்தில் போட்டு கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க உதவுமாறு நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT