தூத்துக்குடி

எட்டயபுரம் வட்டத்தில் தெருமுனை பிரசாரக் கூட்டம்

4th Sep 2019 09:45 AM

ADVERTISEMENT

விவசாயிகளின் பயிர் கடன்கள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்யவேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் எட்டயபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்க எட்டயபுரம் வட்டச் செயலர் வி. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் பி. முத்துராஜ், ஜெ. அப்பணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். அழகுமுத்துபாண்டியன் கலந்துகொண்டு தெருமுனை பிரசார கூட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். 
நடுவப்பட்டி, சின்னமலைகுன்று, வங்கார்பட்டி, கடலையூர், காட்டுராமன்பட்டி, வள்ளிநாயகிபுரம், உருளைகுடி, பீக்கிலிபட்டி, பனைப்பட்டி, எம்.கோட்டூர், முத்துலாபுரம் ஆகிய பகுதிகளில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்தில், விவசாய கடன்கள் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். 2016இல் இருந்து நிலுவையிலுள்ள பயிர்காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வரவு வைக்காமல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசினர். 
கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ். நல்லையா, நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், ஜெயராமன், குருசாமி, அழகர்சாமி, ரவீந்திரன், கனகராஜ் மற்றும் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT