தூத்துக்குடி

உடன்குடி, சாத்தான்குளத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

4th Sep 2019 09:46 AM

ADVERTISEMENT

உடன்குடி, சாத்தான்குளம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில்  பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் செவ்வாய்க்கிழமை குலசேகரன்பட்டினம் கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
உடன்குடி ஒன்றிய அகில பாரத இந்து  மகாசபா சார்பில்,  27 இடங்களில் விநாயகர் சிலைகள் செப்.1 ஆம் தேதி  பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.  
செப்.3 ஆம் தேதி  மாலை 4 மணிக்கு அனைத்து விநாயகர் சிலைகளும், தேரியூர் ராமகிருஷ்ணா பள்ளி அருகே கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஊர்வலம்  தொடங்கியது. 
 இந்து மகாசபா  மாவட்ட பொதுச்செயலர் முத்துகிருஷ்ணபெருமாள் தலைமையில் , அமமுக மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலர் பி.ஆர்.மனோகரன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். 
இந்து மகாசபா மாவட்டத் தலைவர் சக்திகுமார், மாவட்டச் செயலர்கள் ரவிச்சந்திரன், ராமர், இசக்கிமுத்து, ஒன்றியத் தலைவர் செந்தில், நகரத் தலைவர் உமாபதி, ஆலய பாதுகாப்புக் குழுச் செயலர் பாலன், இந்து மகாசபா மாநிலச் செயலர் ஐயப்பன், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச்செயலர் ரவிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். 
ஊர்வலம் உடன்குடி பிரதான கடை வீதிகள், வில்லிகுடியிருப்பு வழியாக குலசேகரன்பட்டினம் சூரசம்ஹார கடற்கரையை அடைந்தது. அங்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அனைத்து சிலைகளும் கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
சாத்தான்குளம் : ஒன்றிய இந்து மக்கள் கட்சி சார்பில்,    பொத்தகாலன்விளை, இந்திராநகர், வைரவம்புதுக்குடி உள்ளிட்ட பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.  சாத்தான்குளம் ஒன்றியத் தலைவர்  ரவிக்குமார் தலைமை வகித்தார்.  மாநில பொதுச் செயலர் ரவிகிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.  இதில் மாவட்ட துணைத் தலைவர்  துரைப்பாண்டியன்,  தெற்கு மாவட்டச் செயலர் சக்திவேல்,  திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் இசக்கிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் குலசேகரன்பட்டினம் கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
தூத்துக்குடி கூடுதல் டிஎஸ்பி குமார் தலைமையில் டிஎஸ்பிகள் பாரத் (திருச்செந்தூர்),  ரவிச்சந்திரன் (மணியாச்சி), பால்துரை(சாத்தான்குளம்),  சுரேஷ் பெலிக் பீட்டர் (தூத்துக்குடி), குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் ராதிகா குமார் உள்பட இருநூறுக்கும் மேற்பட்ட போலீஸார்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூரில்...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருச்செந்தூர், குமாரபுரம் ஸ்ரீசக்தி விநாயகர் கோயிலில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை  பூஜைகள் நடைபெற்றது.  மாலை ஸ்ரீ சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக,  அலங்கார தீபாராதனை நடைபெற்றது.   மாலை 6.30 மணிக்கு உற்சவர் மூஷிக  வாகனத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  ஏற்பாடுகளை குமாரபுரம் நிர்வாகக் குழுத் தலைவர் இரா.கோடீஸ்வரன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

நாசரேத்தில்....
நாசரேத் அருள்மிகு ஸ்ரீ சக்திவிநாயகர் கோயிலில் விநாயகர்  சதுர்த்தியை முன்னிட்டு காலையில்  கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.  இரவில் சக்தி விநாயகர் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
போலையர்புரம்  காமராஜ் நகரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு,  இந்து முன்னணி  கிளைத் தலைவர் மலையபெருமாள் தலைமை  வகித்தார். ஒன்றியச் செயலர் தவசிமுத்து வரவேற்றார். மாவட்ட அன்னையர் முன்னணி பொறுப்பாளர்  ஆர்.எஸ். சுந்தரவேல்  அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.  இதில் நிர்வாகிகள்  கிருஷ்ணன், முத்துராஜ், லிங்கபாண்டி உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT