தூத்துக்குடி

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா

4th Sep 2019 09:46 AM

ADVERTISEMENT

ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
இக்கோயிலில் சதுர்த்தியை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜையும், காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது பிற்பகல் 12 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர்  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் நாக ஜடை சிங்காரத்துடன் மேளதாளங்கள் முழங்க ஸ்வாமி ராஜவீதி புறப்பாடு நடைபெற்றது.  இரவு 10  மணிக்கு ஆலய சேர்க்கை தீபாராதனை நடைபெற்றது.  ஏற்பாடுகளை ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண்விநாயகர் தேவஸ்தான பூஜா ஸ்தானீகர் விக்னேஷ்வர பட்டர்,  மண்டகப்படிதாரர் நெல்லை விநாயகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT