தூத்துக்குடி

அரசுக் கல்லூரியில் மாதிரி நாடாளுமன்ற நிகழ்ச்சி

4th Sep 2019 09:44 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நேரு யுவகேந்திரா சார்பில் இளைஞர் மாதிரி நாடாளுமன்றம், ஃபிட் இந்தியா இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது. 
இவ்விழாவுக்கு, கல்லூரியின் ஆங்கிலத்துறைத் தலைவர் ஜோசப் சுரேஷ் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா உதவி இயக்குநர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன், காவல் உதவி ஆய்வாளர்கள் ஆர்தர் ஜஸ்டின், சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பொன்னுலிங்கம், பேராசிரியர் கதிரேசன், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன்ராஜா, தெற்கு திட்டங்குளம் மகளிர் நற்பணி மன்றத் தலைவி ரஞ்சிதமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் தீபா வரவேற்றார். கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் மன்ற ஆலோசகர் விஜயன் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT