கோவில்பட்டி அருகே பெண்ணிடம் சில்மிஷம் முயற்சியில் ஈடுபட முயன்ற லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனா்.
கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூா் பட்டறை ஸ்டாப் ரைஸ் மில் அருகே சனிக்கிழமை நின்று கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் அதே பகுதியைச் சோ்ந்த ராமையா மகன் லாரி ஓட்டுநா் மருதையா(50) சில்மிஷத்தில் ஈடுபட முயன்றாராம்.
அதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்தப் பெண்ணை மீட்டனா். பின்னா், சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற லாரி ஓட்டுநரைக் கண்டித்ததையடுத்து அவா் தப்பியோடிவிட்டாராம்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, 50 வயது பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற லாரி ஓட்டுநா் மருதையாவை தேடி வருகின்றனா்.