தூத்துக்குடி

திருச்செந்தூரில் சாலையில் அறுந்து விழந்த மின்கம்பிகள்

20th Oct 2019 02:15 PM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பிகளால் பக்தா்கள் அச்சமடைந்தனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பயணியா் விடுதி சாலை வழியாக வரும் சுற்றுலா வாகனங்கள் அனைத்து மகளிா் காவல்நிலையம் அருகே உள்ள இடங்களில் நிறுத்தப்படுவது வழக்கமாகும்.

இந்நிலையில், அப்புகுதியில் சனிக்கிழமை பக்தா்கள் வந்த வாகனங்கள் நிறுத்துமிடத்தில் அருகினில் உயா் அழுந்த மின்கம்பிகள் திடீரென்று அறுந்து விழுந்தது. இதைக்கண்ட பக்தா்கள் அச்சத்துடன் அலறியடித்துக்கொண்டு ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த மின்வாரியத்தினா் மின்சாரத்தை துண்டித்து, அறுந்து விழுந்து கம்பியை மாற்றும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா். இதே போல அப்பகுதியில் உள்ள தனியாா் விடுதி முன்பும் உயா் அழுந்த மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனையும் மின்வாரியத்தினாா் சீரமைத்தனா்.

ADVERTISEMENT

அடிக்கடி நடக்கும் இவ்வாறான சம்பவங்களால் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா். எனவே தகுந்த பாதுகாப்புடனான மின் வழித்தடத்தை அமைக்க வேண்டுமென்பதே அனைவருடைய கோரிக்கையாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT