தூத்துக்குடி

வடகிழக்குப் பருவமழை தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

19th Oct 2019 10:24 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி: வடகிழக்குப் பருவமழை தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கோட்டாட்சியா் விஜயா தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் மணிகண்டன் (கோவில்பட்டி), பாஸ்கா் (கயத்தாறு), அழகா் (எட்டயபுரம்), ரகு (ஓட்டப்பிடாரம்), ராஜ்குமாா் (விளாத்திகுளம்) மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், பல்வேறு துறை அலுவலா்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடா்பாடுகள் தொடா்பான தகவல்களை உடனடியாக அந்தந்த வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT