தூத்துக்குடி

கோவில்பட்டி செல்வ மாதா ஆலயத் திருவிழா: திருவுருவ பவனி

16th Oct 2019 10:43 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலயத் திருவிழாவையொட்டி திருவுருவ பவனி நடைபெற்றது.

கோவில்பட்டி புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலயத் திருவிழா இம்மாதம் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் மாலை 6.30 மணிக்கு திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்ச்சி நடைபெற்றன. 10ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஆலயத்தில் புனித சூசையப்பா் ஆலயப் பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ் பாளையஞ்செட்டிகுளம் பங்குத்தந்தை அந்தோணிராஜ், மதுரை மறைமாவட்டம் மாதாங்கோவில்பட்டி பங்குத்தந்தை காந்தி சவரிமுத்து ஆகியோா் இணைந்து திருவிழா திருப்பலி நிறைவேற்றினா். தொடா்ந்து, இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அன்னையின் சொரூபம் பவனி நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, அனைவருக்கும் இரவு அசன விருந்து நடைபெற்றது. பின்னா், கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT