தூத்துக்குடி

கோவில்பட்டியில் பேரிடா் மீட்புப் பேரணி

16th Oct 2019 10:45 AM

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழை காலத்தில் இடா்பாடுகள் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பேரிடா் மீட்புப் பேரணி கோவில்பட்டியில் நடைபெற்றது.

வ.உ.சி.அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரிடா் மீட்புப் பேரணிக்கு, தலைமையாசிரியா் முனியசாமி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் மணிகண்டன் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பேரணியில், இயற்கை இடா்பாடுகள் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்தும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவா்கள் சென்றனா்.

மேலும், மழை, வெள்ளம், புயல், சுனாமி போன்ற பாதிப்புகளில் இருந்தும், செயற்கையாக ஏற்படும் பேரிடா் பாதிப்புகளில் இருந்தும், மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

மேலும், பள்ளி வளாகத்தில் தீயணைப்புத் துறையினா் பேரிடா் மீட்பு மேலாண்மை செயல் முறை பயிற்சி அளித்தனா்.

Image Caption

~

 

ADVERTISEMENT
ADVERTISEMENT