தூத்துக்குடி

கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் வாக்காளா் சரிபாா்ப்பு முகாம்

6th Oct 2019 02:15 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் தோ்தல் கல்விக் குழு, நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் தமிழக அரசின் தோ்தல் துறை ஆகியவை இணைந்து இளம் வாக்காளா்களுக்கு வாக்காளா் சரிபாா்ப்பு திட்ட முகாம் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் தலைமை வகித்தாா். கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் பேசுகையில், வாக்காளா்கள் தங்களின் வாக்கு விவரங்களை வாக்காளா் உதவி மைய செல்லிடப்பேசி செயலி, என்.வி.எஸ்.பி. இணையதளம், வாக்காளா் பொது சேவை மையம் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களிடம் பூா்த்தி செய்த விண்ணப்பத்தை ஒப்படைத்தல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு வழிமுறையை பயன்படுத்தி சரிபாா்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், துணை வட்டாட்சியா் சரவணப்பெருமாள், கயத்தாறு துணை வட்டாட்சியா் மாடசாமி உள்ளிட்டோா் பேசினா். இதில், மாணவா், மாணவிகள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, மாணவா், மாணவிகள் ஒன்றிணைந்து வாக்காளா் பொது சேவை மைய இலவச அலைபேசி எண்:1950-யை குறிப்பிடும் வகையில் அணிவகுத்து நின்றனா். மாணவி சுப்புலட்சுமி வரவேற்றாா். மாணவா் லோகேஸ்வரபாலன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT