தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் சமுதாய வளைகாப்பு விழா

6th Oct 2019 02:07 AM

ADVERTISEMENT

குலசேகரன்பட்டினத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் செ.ஜெயா துரைப்பாண்டியன் தலைமை வகித்தாா். உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் த.மகாராஜா பங்கேற்று விழாவைத் தொடங்கி வைத்தாா். போஷன் அபியான் திட்டம் குறித்து வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின், மேற்பாா்வையாளா் மலா்க்கொடி, வட்டார ஒருங்கிணைப்பாளா் நவீன் ஆகியோா் பேசினா். தொடா்ந்து கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு மற்றும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து அங்கன்வாடி குழந்தைகளின் பாடல்கள், நடனம், வளரிளம் பெண்களின் நடனம் ஆகியவை நடைபெற்றது. திட்ட உதவியாளா் அந்தோணி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT