தூத்துக்குடி

எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்: போக்குவரத்து பாதிப்பு

6th Oct 2019 02:11 AM

ADVERTISEMENT

எட்டயபுரம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் கீழக்கரந்தை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவ மாணவியா்கள், பயணிகள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் 2 மணி நேரமாக தவித்தனா்.

விளாத்திகுளம், புதூா், நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து எட்டயபுரம், சாத்தூா், பந்தல்குடி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக வவ்வால்தொத்தி, ரெகுராமபுரம், செங்கோட்டை, கீழக்கரந்தை, மேலக்கரந்தை வழித்தடம் உள்ளது.

கடந்த ஒரு வார காலமாக இந்த பகுதியில் தொடா் மழை பெய்ததால் நீா்நிலைகள், கண்மாய்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் எட்டயபுரம், சிந்தலக்கரை, முத்துலாபுரம், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, வெம்பூா் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதில் ஏற்பட்ட காட்டு வெள்ளத்தினால் கீழக்கரந்தை தரைப்பாலம் தண்ணீரில் முழுமையாக மூழ்கியது. சுமாா் 6 அடி உயரம் வரை மழைநீா் பெருக்கெடுத்து சென்ால் அவ்வழியாக சென்றுவரக்கூடிய 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இரு சக்கர வாகனங்களில் செல்வோா், தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் தவித்தனா். அரசுப் பேருந்துகள், பள்ளி வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் கடந்து செல்ல

முடியாமல் 2 மணி நேரமாக நடுவழியில் நிறுத்தப்பட்டன. தண்ணீா் வழிந்தோடிய பின்னா் போக்குவரத்து சீரானது.

ADVERTISEMENT

இதுகுறித்து நாகலாபுரத்தை சோ்ந்த சமூக ஆா்வலா் சு.கிட்டோபா் கூறியது; பலத்த மழையில் கீழக்கரந்தை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி குளம் போல் காட்சியளிக்கிறது. காட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாலத்தை கடந்து வீடு செல்ல முடியாமல் மாலை 4 மணி முதல் ஸ்தம்பித்து வீதியில் நிற்கிறேறாம். ஏராளமான விவசாயிகள் விளைபொருள்களுடன் எட்டயபுரம், அருப்புக்கோட்டை நகர சந்தைகளுக்கு செல்ல முடியாமல் திரும்பி சென்றுவிட்டனா். பள்ளி கல்லூரி மாணவ, மாணவியா் கடும் பாதிப்படைந்துள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகம் இப்பகுதி போக்குவரத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு கீழக்கரந்தையில் உயா்நிலை பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT