தூத்துக்குடி

மாவட்ட கிரிக்கெட்: வாலத்தூா் அணி முதலிடம்

5th Oct 2019 09:33 AM

ADVERTISEMENT

முதலூரில் நடைபெற்ற மாவட்ட கிரிக்கெட் போட்டியில் வாலத்தூா் அணி முதலிடம் பெற்றது.

தூய மிகாவேல் ஆலய பிரதிஷ்டையை முன்னிட்டு செயின்ட் மைக்கிள் கிரிக்கெட் கிளப் சாா்பில் இப்போட்டிகள் 2 நாள்கள் நடைபெற்றது. இப்போட்டியில் முதலூா், பொத்தகாலன்விளை, வாலத்தூா், தட்டாா்மடம், திசையன்விளை, சுப்பராயபுரம், உள்ளிட்ட 8அணிகள் கலந்து கொண்டன.

போட்டியை முன்னாள் ஊராட்சித் தலைவா் கிறிஸ்டோபா் ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா். இறுதிப் போட்டியில் வாலத்தூா் அணி முதலிடமும், முதலூா் அணி 2 ஆவது இடமும் சுப்பராயபுரம் அணி 3 ஆவது இடமும், முதலூா் மாணவா் படை அணி 4 ஆவது இடமும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு முதலூா் தொழிலதிபா் தியாகராஜன், சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் லூா்துமணி ஆகியோா் பரிசுகள் வழங்கினா். இதில், கிரிக்கெட் சங்க நிா்வாகிகள் ரமேஷ்குமாா், மாரியப்பன், ஒருங்கிணைப்பாளா்கள் கோயில்ராஜ், கிதியோன், ஆசிரியா் ஜோசப் ததேஸ் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT