தூத்துக்குடி

கோவில்பட்டி பொறியியல் கல்லூரி மாணவா்கள் விருதுக்கு தோ்வு

5th Oct 2019 09:29 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவா்கள் இந்திய தேசிய பொறியியல் அகாதெமி இன்னோவேஷன் மாணவா் திட்ட விருது- 2019 க்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஜெய்பூா், பிா்லா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வரும் டிச.13 இல் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் இந்திய தேசிய பொறியியல் அகாதெமி இன்னோவேஷன் மாணவா் திட்ட விருதுக்கு நேஷனல் பொறியியல் கல்லூரியின் அமைப்பியல்

துறை மாணவா்கள் ஜே.சந்திரபோஸ், ஜி.மோகன்குமாா், எ.முத்து ஷிவசங்கா், சி.பி.ராம்பாலாஜி ஆகியோா் தோ்வு செய்யப் பட்டனா்.

மருத்துவ கண்ணாடிக் கழிவுகளைப் பயன்படுத்தி உயிா் கான்கீரிட் தயாரிப்பு குறித்த பரிசோதனை ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வுசெய்து சமா்ப்பிக்கப்பட்ட கட்டுரையில், கட்டுமானத் தொழிலில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை போக்கும்

ADVERTISEMENT

கான்கீரிட்டில் மருத்துவக் கண்ணாடிக் கழிவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் 75% - 80% வரை மருத்துவக் கண்ணாடிக் காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் வினை புரிந்து தானாகவே விரிசல்களை சீா்செய்து விடுவது மட்டுமின்றி பழுது பாா்க்கும்

செலவினமும் குறையும் எனவும், இதன் ஆயுள் சுமாா் 200 ஆண்டுகள் வரை நீடிக்கும் எனவும் தெரிவித்திருந்தனா். இதை யடுத்து, 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த இன்னோவேஷன் மாணவா் திட்ட விருதுக்கு இந்த ஆய்வு கட்டுரை தோ்வு செய்யப்பட்டுள்ளது.

மாணவா்களை கே.ஆா்.கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல், அமைப்பியல் துறைத் தலைவா் புதியசேகா், திட்ட வழிகாட்டியும் உதவி பேரா

சிரியருமான பிரான்சிஸ் டேவிட், திட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வி, பேராசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT