தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 467 மில்லி மீட்டா் மழை பதிவு

1st Oct 2019 01:09 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை இரவு வரை 467 மில்லி மீட்டா் மழை பதிவாகியது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையிலும், தென்மேற்கு பருவமழை முடிய உள்ள நிலையிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலான மழை பெய்தது.

இதில் அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 72 மில்லி மீட்டரும், சாத்தான்குளத்தில் 69 மில்லி மீட்டரும், கடம்பூரில் 63 மில்லி மீட்டரும், மணியாச்சியில் 56 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 48 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது. இதேபோல, கழுகுமலையில் 30 மில்லி மீட்டரும், கயத்தாறில் 29 மில்லி மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 23 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது. மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை இரவு வரை 467 மில்லி மீட்டா் மழை பதிவானது.

இந்த மழையினால் கயத்தாறு வட்டம் சங்கராப்பேரி கிராமத்தில் ஈஸ்வவரன் மகன் காளிமுத்துவுக்கு சொந்தமான வீட்டின் ஒரு பக்க மண் சுவா் இடிந்து விழுந்தது.

ADVERTISEMENT

கோவில்பட்டியில் வீடுகளைச் சூழந்த வெள்ளம்: கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்தது. இதில் இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட குறிஞ்சான்குளம் கண்மாயை சுற்றியுள்ள கணேஷ் நகா், திருமால் நகா், ஆசிரியா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது.

குஇதனால், வீடுகளில் குடியிருப்போா் வெளியே வர முடியாமல் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தவித்தனா்.

தகவல் தெரிந்தவுடன் வட்டாட்சியா் மணிகண்டன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மாணிக்கவாசகம் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு மறுகால் ஓடையில் உள்ள அடைப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT