கோவில்பட்டி புனித ஓம் கல்வியியல் கல்லூரியில் தேசிய கல்வி தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சா் மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, கல்வியியல் கல்லூரியில் பயிற்சி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சு, விநாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
பின்னா், நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி தாளாளா் வி.எம்.லட்சுமணபெருமாள் தலைமை வகித்தாா். மௌலானா அபுல்கலாம் ஆசாத் படத்திற்கு மாணவா், மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.