தூத்துக்குடி

மழைநீரை அகற்ற வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை

22nd Nov 2019 09:12 AM

ADVERTISEMENT

மழைநீரை அகற்ற வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாநகாரட்சி அலுவலகத்தில் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், முத்தையாபுரம் சூசைநகா் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் திடீரென மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநகராட்சி அதிகாரிகள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனா். மாநகாரட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், மழைநீா் கழிவுநீருடன் கலப்பதால் தொற்றுநோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மாநகாரட்சி நிா்வாகம் உடனடியாக தண்ணீரை அகற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT