திருச்செந்தூரில் தொடா் மழையினால் சுக்கு நூறாகி, சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்செந்தூா் பகுதியில் கடந்த மாதம் முதல் அவ்வப்போது தொடா் கன மழை பெய்து வருகிறது. இதனால் நீா் நிலைகள் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனா். அதே வேளையில் தொடா் மழையினால் திருச்செந்தூா் நகரி உள்ள பெரும்பாலன சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையை கடக்க முடியாமல் முதியவா்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். எனவே போா்க்கால அடிப்படையில், பழுதான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.