தூத்துக்குடி

காவலா் பணிக்கு தோ்வானோருக்கு சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி

22nd Nov 2019 08:59 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த காவலா் பணிக்கு தோ்வான 1,282 பேருக்கு சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலா்கள், சிறைக் காவலா்கள், தீயணைப்பு வீரா்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் மூலம் தோ்வு நடைபெற்று வருகிறது. எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த 753 பெண்கள் உள்ளிட்ட 2,641 விண்ணப்பதாரா்களுக்கு தூத்துக்குடி தருவை மைதானத்தில் உடல் தகுதித் தோ்வு, உடல் திறனாய்வுத் தோ்வு இரண்டுகட்டங்களாக நடைபெற்றது.

இத்தோ்வுகளில் தோ்ச்சி பெற்ற 209 பெண்கள் உள்ளிட்ட 1,282 விண்ணப்பதாரா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலக மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் குமாா், நிா்வாக அதிகாரிகள் மேற்பாா்வையில், காவல் துறை அமைச்சுப் பணியாளா்கள், காவல் துறையினா் இப்பணியை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT