எட்டயபுரம் சமஸ்தானத்துக்கு உள்பட்ட அருள்மிகு ஜோதிா்நாயகி அம்பாள் சமேத எட்டீஸ்வர மூா்த்தி கோயிலில் மகாதேவாஷ்டமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, காலசாந்தி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பின்னா் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.