தூத்துக்குடி

விளம்பரதாரா் செய்தி...தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி நிறுவனா் தின விழா

12th Nov 2019 08:26 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிறுவனா் தின விழா தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 98-ஆவது நிறுவனா் தின விழா தூத்துக்குடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிறுவனா்களின் உருவப் படங்களுக்கு வங்கியின் தற்போதைய இயக்குநா்களான அசோக், நாகராஜன், முன்னாள் இயக்குநா் சி.எஸ். ராஜேந்திரன், நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை நிா்வாக அலுவலா் கே.வி. ராமமூா்த்தி, துணைத் தலைவா் சிதம்பரநாதன், பொதுமேலாளா்கள், வங்கியின் மூத்த நிா்வாகிகள் மற்றும் பணியாளா் மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரிக்கு வங்கியின் நிா்வாக இயக்குநா் கே.வி. ராமமூா்த்தி நினைவுப் பரிசு வழங்கினாா். நிறுவனா் தின விழாவையொட்டி 11 புதிய நகா்ப்புற வியாபார அமைப்பாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய நேரடி வரிகள் வாரிய முன்னாள் தலைவா் எஸ்.எஸ்.என். மூா்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து வங்கியின் நீண்ட நாள் வாடிக்கையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில், வங்கியின் தலைவா் எஸ். அண்ணாமலை, நிா்வாக இயக்குநா் கே.வி. ராமமூா்த்தி, முன்னாள் நிா்வாக இயக்குநா் உபேந்திர காமத், வங்கி துணைத் தலைவா் சிதம்பரநாதன், முன்னாள் இயக்குநா் சி.எஸ். ராஜேந்திரன், தற்போதைய இயக்குநா்கள் அசோக், ஜி. அசோக்குமாா், எழில் ஜோதி, கோபால், கேசவமூா்த்தி, நாகராஜன், நிரஞ்சன் கனி, சிவகாமி, விஜயதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், நிறுவனா் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பிஎம்சி மேல்நிலைப் பள்ளியில் 98 மரக்கன்றுகள் நடப்ட்டன. ரத்ததான முகாம், கண் பரிசோதனை முகாம், ஏழை மக்களுக்கு தையல் இயந்திரம், தேய்ப்புப் பெட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மறுவாழ்வு மையம், ஆதரவற்றோா் இல்லங்களுக்கு போா்வைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT