தூத்துக்குடி

ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

12th Nov 2019 08:19 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி: அகில இந்திய ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம் கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

செயலா் ஹரிஹரசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் தீனதயாளன் முன்னிலை வகித்தாா். பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளா் ஸ்டாலின், உதவி மேலாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா், ஓய்வூதியம் பெறுவதில் பாரத ஸ்டேட் வங்கியில் ஏற்படும் குறைகள் குறித்து கேட்டறிந்தனா். ஓய்வூதியா்களுக்கு வங்கியின் செயல்பாடு குறித்து விளக்கமளித்தனா்.

கூட்டத்தில், ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை இம்மாதம் இறுதிக்குள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதில், குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்க உதவிச் செயலா் செல்லப்பெருமாள் உள்பட சங்க உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா். பொருளாளா் முருகையா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT