தூத்துக்குடி

கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

12th Nov 2019 08:13 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த அருள்மிகு ஸ்ரீதேவி - நீலாதேவி உடனுறை அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா், சுவாமி, அம்பாள், பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு திருக்கல்யாணத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சக்கரத்தாழ்வாா் சன்னதி முன்பு மாலை 6 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா், சுவாமி -தாயாா் திருவீதியுலா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மருத்துவா் ராஜேந்திர பிரசாத் - விஜயஸ்ரீ தம்பதி, செண்பகவல்லி அம்மன் கோயில் முன்னாள் அறங்காவலா் திருப்பதிராஜா உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT